Categories
அரசியல்

கேட்டது ஒன்னு….! ”கிடைத்ததோ அதிஷ்டம்” குஷியில் ஆளும் தரப்பு …!!

டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் ஆளும் தரப்பு கடுமையான மகிழ்ச்சியில் திளைக்கின்றது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை பிறப்பித்தது. ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது. முறையான சமூக விலகல் கடைபிடிக்கவேண்டும். ஒருவருக்கு இத்தனை நாள் தான் மது வாங்க வேண்டும். ஒருவருக்கு 750 மில்லி தான் மது விற்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து திறக்கப்பட்ட மதுக்கடைகளில் முறையான சமூகவிலகல் கடை பிடிக்க வில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது,  சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளும் தடை போட்டது.

டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் எப்படி இயங்க வேண்டும், எவ்வாறு இயங்க வேண்டும், என்னென்ன முறைகள் இயங்க வேண்டும், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்னென்ன ? போன்ற அனைத்து விஷயங்களையும் தமிழக அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிடத்த்து.

டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் சேராமல் இருப்பதற்கும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கும் புதிய விதிமுறைகளை அரசே வகுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் எப்போதும் போல டாஸ்மாக் கடைகள் இயங்கலாம். இது முழுக்க முழுக்க தமிழக அரசின் கையில் தான் இருக்கின்றது என்ற உத்தரவை தமிழக அரசு பெற்றது. டாஸ்மாக் மதுக்கடையை திறக்க அனுமதி கேட்டு சென்ற தமிழக அரசுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மது விற்பனைக்கு உத்தரவு பிறப்பித்தால் ஆளும் தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது.

Categories

Tech |