Categories
உலக செய்திகள்

“நெஞ்சு வலிக்கு டாக்டர்” இதயத்தில் இருந்த பொருள்… ஸ்கேன் ரிப்போர்ட்டால் அதிர்ந்த மருத்துவர்கள்..!!

நெஞ்சு வலி என்று சென்ற சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

அமெரிக்காவில் 17 வயது சிறுவன் ஒருவன் மூன்று தினங்களாக மிகுந்த நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலியை பொறுக்க முடியாத சூழல் உருவானதால் அச்சிறுவன் மருத்துவமனைக்கு சென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அங்கு அவனுக்கு எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிறுவனின் இதயத்தில் 3.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட தையல் ஊசி சிக்கியிருந்தது.

இதயத்தில் ரத்தத்தை சேகரித்து வெளியேற்ற உதவும் வென்ட்ரிக்கிள் எனப்படும் பகுதியில் ஊசி இருந்தது. இதனை தொடர்ந்து அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த ஊசி வெளியில் எடுக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து சிறுவன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தையல் பணியை செய்து வரும் இளைஞன் தனக்கு தெரியாமல் ஊசியை விளங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |