போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடையில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற முருகேசனுக்கு மதியம் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மயங்கி விழுந்த முருகேசனை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு 11 மணியளவில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.