அமைதியாக பிறந்துவிட்டது 2021. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை இயற்கைப் பேரிடர், புயல், கொரோனா என்று சென்ற வருடமே அழிவுக்கான வருடமாகவே இருந்துவந்தது. தற்போது 2020 மறைந்து, அமைதியாக பிறந்தது 2021. இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எண்ணமாக உள்ளது. கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொண்டாட்டங்கள் இல்லாமல்தான் 2021 பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் அனைவரும் வரவேற்பார்கள்.
இருள் சூழ்ந்து காணப்படும் வானத்தை வானவேடிக்கை இரவை வெளிச்சமாகும். மக்கள் இந்த வருடம் மிகவும் அமைதியாக 2021யை வரவேற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி தங்களது அன்பை வெளி காட்டி வருகின்றனர். இந்தப் புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுக்கும் ஆண்டாக இருக்க வேண்டும் என்பது தான் பலருடைய சிந்தனையாக உள்ளது. நம்முடைய சிந்தனையும் அதுதான். மக்கள் ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் நல்ல வருடமாக அமைய வேண்டும் என்பதை வாழ்த்துகிறோம். முடிந்தவரை நல்ல சிந்தனைகளையும், நல்ல விஷயங்களையும் வரவேற்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.