சீத்தாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் .
சீத்தாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் செரிமானம் சீராகும். சீத்தாப்பழத்துடன் உப்பை கலந்து பருக்கள் மேல் பூசி வர பருக்கள் குணமாகும். சீதாப்பழ விதைகளை பொடியாக்கி, சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகி பேன் தொல்லையிலிருந்து விடு படலாம்.
சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலுடையது .சீத்தாப் பழ விதையோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வு குறையும். சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பும் , பல்லும் உறுதியாகும்.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வரும்போது இதயம் உறுதிப்படும் மற்றும் காசநோய் இருந்தாலும் குணமாகும். தொடர் வாந்தி, குமட்டல் உள்ளவர்களுக்கு சீதாப்பழத்தை கொடுத்து சாப்பிடச்செய்யும்போது உடனே வாந்தி, குமட்டல் நின்றுவிடும்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறி விடும் .சிறிது வெந்தயத்துடன் சீதாப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் விரைவில் குணமாகி விடும். சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குணமாகும் .சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர சரும வறட்சி நீங்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உள்ளது .