Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள்

நெஞ்சை பதறச் செய்கிறது… சட்டப்படி கடுமையான நடவடிக்கை…. முதல்வர் ட்விட் …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார்.

அதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துகிறார்.

Categories

Tech |