Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கடுமையாக அதிகரித்த வெப்பநிலை…. மக்கள் வீடுகளில் முடக்கம்…!!!

இங்கிலாந்து நாட்டில் சமீப நாட்களாக இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக வெப்ப தாக்கம் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பத்தை தாங்க முடியாமல் கடற்கரைகளில் மக்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் லண்டனில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப  அலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை உச்சத்தை அடைகிறது. லண்டனில் வழக்கமாக மிதமான வெப்பநிலை மற்றும் மழை தான் இருக்கும். எனவே இவ்வாறு திடீரென்று வெப்பநிலை அதிகரிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் வருடத்தில் அங்கு அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், தற்போது 40 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. எனவே கடும் வெப்பத்தை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். அரசாங்கம், அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது.

இந்நிலையில், லண்டனில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துள்ளது. வெப்பநிலை அதிகமாக இருந்ததால் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் தீ பரவி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. தீயணைப்பு படையினர் சுமார் 100க்கும் அதிகமானோர் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். லண்டன், ரெட் அலெர்ட்டில் முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ரயில் நிலையங்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

Categories

Tech |