தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 24 மணிநேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.