தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர்,கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.