தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு , கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.