தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நான்காவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன் எதிரொளியாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, சேலம்,தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.