தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.
இதனால் டிச.8ம் தேதி வடகடலோர தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக (ஆரஞ்சு அலர்ட்) வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதானல். 7ம் தேதி கனமழையும், 8ம் தேதி மிக கனமழையும் பெய்யும் என்பதால் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என தெரிகிறது