Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடும் ஊழல்”….. பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதாவை தவிர யாராலும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கொள்ளையடித்திருக்கிறார்கள். ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை.

ஆனால் தங்கமணி தான் தேவை இல்லாமல் பேசி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தங்கமணி தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் களத்தில் இறங்கி அவரை திருத்த வேண்டியிருக்கும். தங்கமணி அதிமுக கட்சியில் இருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அவருடைய தொகுதியான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளராக நிற்கட்டும். இதே தொகுதியில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஒருவரும் வேட்பாளராக நிற்பார். அப்போது இருவரும் மோதிக் கொள்ளலாம். தமிழக அரசு பால் விலையை குறைப்பதற்கு முன்வராவிட்டால் ஓபிஎஸ் தலைமையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எடப்பாடியார் பக்கம் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் பாஜக பக்கம் இணைவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் பிறகு சசிகலா மற்றும் பிரிந்து கிடக்கும் அதிமுகவைனர் ஒன்றிணைந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறார். இவர்களுடன் இணைந்து அதிமுகவை வலுப்படுத்துவதற்கு ஓபிஎஸ் தயார் நிலையில் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இருவரும் மாறி மாறி தாங்கள் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

அதே ஆட்சியில் தாங்களும் இருந்ததை உணராமல் இரு தரப்பினரும் மாறி மாறி ஊழல் குற்ற சாட்டுகளை கூறுவது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தங்கமணி மற்றும் வேலுமணி மீது பல்வேறு புகார்கள் இருக்கும் நிலையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக இதில் தலையிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் இது போன்ற ஊழல் குற்றசாட்டுகளால் ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் பின்னடைவு ஏற்பட்டு விடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |