தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் காலை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டது. அதில் அரபிக்கடலில் டவ்-தே என்ற புயல் உருவாகியுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தது.
இதையடுத்து தற்போது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வரும் 18ஆம் தேதி நீலகிரி தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.