ஸ்பெயினில் கோஸ்டா பிராவா என்ற பகுதியில் காட்டு தீ மளமளவென பரவுவதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
Cap de Creus என்ற தேசிய பூங்காவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காட்டுத்தீயால் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அப்பகுதியில் வாகனத்தில் சென்ற ஒரு நபர் சிகரெட் துண்டை வீசி எறிந்திருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட தீ காடு முழுவதும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு படையினர் விமானம் வழியாக தீயை கட்டுப்படுத்த முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சுமார் 90 வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், 6 விமானங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர அவர்கள் போராடி வருகிறார்கள்.
அதாவது சுமார் 50 வருடங்களுக்கு ஏற்படக்கூடிய சேதம் ஒரு சிறிய சிகரெட் துண்டால் காட்டுப்பகுதி முழுக்க சேதமடைய செய்தது. எனவே அப்பகுதிகளில் வாழ்ந்த 350 நபர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மேலும் 230 நபர்கள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் அந்த சிகரெட் துண்டை வீசி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.