அமெரிக்காவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஓரேகான் என்ற மாகாணத்தில் இருக்கும் காடுகளில் தீ பற்றி எரிந்து அதிவேகமாகப் பரவுகிறது. இதுமட்டுமல்லாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே பல சிரமங்களுக்கு மத்தியில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனினும் கலிபோர்னியா காட்டு தீயுடன் ஒப்பிட்டால் பொருட்சேதம் பெரிய அளவில் இல்லை. மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுத் தீ பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய சுமார் 2000 குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். மேலும் 5000 குடியிருப்புகள் ஆபத்தான நிலையில் தான் இருக்கிறது.
இதற்கு முன்பு 70 வீடுகளும் 100 கட்டிடங்களும் தீயில் கருகி பாதிப்படைந்தது. எனினும் நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.