தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(1.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று(1.11.22) கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.