புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் அடை மழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்துள்ளது. மேலும் விவசாயம் மேற்கொள்ள இந்த மழை சிறிது கைகொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.