Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கடும் வெயிலுக்கு மத்தியில்”… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் வெப்ப சலனத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பயங்கர சூறாவளி காற்றுடன் பெய்ததால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |