Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடகிழக்கு பருவமழை காலத்திலே நாம் எந்த அளவு மழை பெறுவோமோ,  அதே மாதிரியான மழை  இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெள்ளமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஆகஸ்ட் 30 – கனமழைக்கு வாய்ப்பு:

22 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, தேனி, கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் சொல்லியுள்ளது.

இயல்பை விட அதிகம்:

தேனியில் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி வரைக்கும் இயல்பை விட 266% அதிகப்படியான மழை பதிவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளார்கள். சென்னையில் கடந்த ஒரு வார காலமாக திடீரென்று மழை பொழிகிறது. சில நேரங்களில் மிதமான மழையாக இருக்கிறது. ஓர் சில இடங்களில் கனமழையாகவும் இருக்கிறது.

அந்த வகையில் வானம் பொதுவாக ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  சில பகுதிகளில் இடி – மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

எங்கெங்கெல்லாம் சூறைக்காற்று வீசப்படுகிறதோ,  அங்கங்க எல்லாம் மீனவர்கள் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், கேரள கடலோரப் பகுதிகள் லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்,  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அங்கு 40-திலிருந்து 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறைகாற்று:

அதே போல குமரி கடல்,  மன்னார்வளைகுடா உள்ளிட்ட பகுதிகளிலும் 40 லிருந்து 50 கிலோமீட்டர் வேகமாக சூறாவளி காற்று  வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் அதற்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |