சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வேதாரண்யத்தில் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து நேற்று இரவு வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அந்த காற்று திடீரென்று சூரை காற்றாக மாறி இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இதமான சூழல் உருவாக்கி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த மலையானது 40.2 மில்லி மீட்டர் அளவு பதிவானது.