Categories
பல்சுவை வானிலை

தமிழகத்துக்கு கன மழை …… ”மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க” எச்சரிக்கை …!!

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாட்களாக பெய்து வருவதால் தமிழகம் , புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல பகுதியில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.

Image result for indian meteorological department

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் , ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்றும் , கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |