Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை முதல் கனமழை……. 24 மணி நேர தகவல் மையம்…… தென்மாவட்டங்களில் தொடக்கம்….!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு கொள்ளலாம்.இதில் தொடர்பு கொண்டு கடலில் காற்றின் வேகத்தின் அளவு, கடல் அலை, மழை விவரம், கடலின் தன்மை,

Image result for ramanathapuram fisherman rain information centre

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாமா போன்றவற்றை தினமும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்மழை, புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும் மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இம்மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும் இம்மையத்தில் மீன்வள ஆய்வாளர், கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் ஆகியோர் இருந்து தகவல்களைப் பரிமாறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான தகவல்களை மீன்வளத்துறை அவ்வப்போது தெரிவித்துவரும் நிலையில், வடகிழக்குப் பருவ மழையால், மீனவர்களைப் பாதுகாக்க இந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Categories

Tech |