கேரளா மழை வெள்ள பாதிப்புக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மூன்றாவது நாளாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்குள்ள மக்களுக்காக பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கேரளா_வுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். மேலும் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி ,அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் , பிஸ்கட் பாக்கெட் , குடிதண்ணீர் , துணிகள் போன்ற பல்வேறு வகையான நிவாரண பொருட்களை சென்னை மாவட்ட திமுக சார்பாக கிட்டத்தட்ட 25 லாரிகள் மூலமாக நேரடியாக கேரளாவுக்கு அனுப்பக்கூடிய பணிகள் நடைபெற்றது.
கடந்து இரண்டு நாட்களாக நிவாரண பொருட்களை திமுக சார்பில் அனுப்பிய நிலையில் இன்று மூன்றாம் நாளாக நிவாரண பொருட்களை அனுப்பும் பணியில் திமுகவின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிவாரண பொருட்களை லாரியில் மூலமாக அனுப்பக்கூடிய நிவாரண பொருட்களை திமுக தலைவர் முக. ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொருட்களை கேரளாவில் இருந்து திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பது குறிப்பிடத்தக்கது.