Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர்,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 சென்டி மீட்டர் மழையும் , நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 சென்டிமீட்டர் மழையும்,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.விழுப்புரம் சங்கராபுரத்தில் 8 சென்டி மீட்டர் மழையும் ,  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலையிலோ , இரவிலோ லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |