Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒரு சில  மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழகம் கேரளா கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில்  10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியுள்ளது.

Image result for வானிலை ஆய்வு மையம்

அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்  சென்னை மற்றும் கடற்கரை நகரங்களில் பொருத்தவரையில் இரு தினங்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரிக்கடல் மற்றும் மால தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் 17 மற்றும் 18ம் தேதி களுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |