வட தமிழகம், புதுவை கடல்பகுதியில் 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி , அரியலூர் , பெரம்பலூர் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , காரைக்கால் , கடலூர் , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழையும் , அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதியில் காற்று மணிக்கு 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.