தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸில் இருக்கும்.