தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. அப்போது முதல் சுற்று மழையை சென்னை பார்த்திருந்தது. பல இடங்களில் மிக கனமழை பெய்து இருந்தது. அதற்கு பிறகு ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது மழையானது கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இன்றைக்கும் கூட நேற்று நள்ளிரவு முதலே இன்று அதிகாலையில் முழுவதுமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது சென்னையில் பரவலாக… அனைத்து இடங்களிலும் விட்டு விட்டு , ஒரு சில இடங்களில் கனமழையாவும், ஒரு சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகின்றது.
கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் கூட தாராபுரத்தில் ஒரே நாளில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பல இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் 5 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.