தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமாக இந்த பருவ மழை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரியலூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இன்று காலை முதல் சென்னை சுற்றுவட்டார பகுதிகளான மணலி மாதவரம் செங்குன்றம் போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையில் ராயப்பேட்டை அண்ணா நகர் நந்தனம் வடபழனி போன்ற இடங்களில் திடீரென வானம் இருடதால் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. பல இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.