பிரேசில் நாட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போதுவரை ஏழு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் பாகியா என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், 30-க்கும் அதிகமான நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தது. பலத்த மழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை சுமார் ஏழு நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 150க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றி வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளனர். 200க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.