பிரேசிலில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்ததில் இரண்டு அணைகள் உடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பஹியா என்னும் பகுதியில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் வெருகா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. மேலும் இந்த ஆற்றின் அணை, நேற்று இரவு நேரத்தில் உடைந்தது.
இதற்கு முன்பே, அந்த அணை பலமின்றி காணப்பட்டது. எனவே, அதிகாரிகள், அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அதனால், அதிர்ஷ்டவசமாக மக்கள் தப்பினர். இந்நிலையில், ஜெஸியாபே என்னும் பகுதியிலிருக்கும், மற்றொரு அணையும் உடைந்திருக்கிறது. இரண்டு அணைகள், அடுத்தடுத்து உடைந்ததால், பாலங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.