பிரேசிலில் பலத்த மழை பெய்து, அதிக அளவில் நீர் தேங்கியிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரேசிலில் உள்ள Maranhao என்ற மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும் வீடுகளைச் சுற்றி தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதனால் மக்களால் தண்ணீரை கடந்து வெளியில் வர முடியவில்லை.
மேலும், அதிகமாக வெள்ளம் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் மாட்டிக்கொண்டவர்களை, மீட்புக்குழுவினர் படகு மூலமாக மீட்டு வருகிறார்கள். இதில் 800க்கும் அதிகமானோர் தங்கள் குடியிருப்புகளை இழந்து முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.