பிரேசிலில் இருக்கும் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் இருக்கும் அணை எந்த நேரத்திலும் உடையக்கூடிய நிலையில் இருப்பதால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் இருக்கும் மினாஸ் ஜெரைஸ் என்னும் மாகாணத்தில் உள்ள, அணை நிரம்பி வழிவதால் எந்த நிலையிலும் உடையக்கூடிய ஆபத்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த, 2019-ஆம் வருடத்தில் 300 பேரை காவு வாங்கிய அணை போல நிகழ்ந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, ஒரு வாரமாக அந்த மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, அம்மாகணத்தின் தென் கிழக்கில் இருக்கும் பாராஜிமினாஸ் என்ற நகரத்திற்கு அருகில் இருக்கும் காரியோகா என்ற அணை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. மழை மேலும், ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று கூறப்பட்டிருப்பதால், அந்த அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அணைக்கு கீழ் பகுதியில் 5 நகர்கள் இருக்கிறது.
அங்கு ஏராளாமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுமோ? என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. மேலும், மக்களும் அதிக பயத்துடன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.