Categories
உலக செய்திகள்

“கனடாவில் பலத்த மழை!”.. வெள்ளம் சூழ்ந்ததால் 7100 மக்கள் வெளியேற்றம்..!!

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

வான்கூவர் நகருக்கு வடகிழக்கில் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மெரிட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாறைகள் உடைந்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, அங்கு வசித்த சுமார் 7100 மக்களை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

மேலும் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 200 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. ஒரு மாதம் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை திங்கட்கிழமையும் தொடர்ந்து பெய்ததால், வெள்ளம் ஏற்பட்டு 250 மில்லிமீட்டர் நீர் மற்றும் சேறு  சாலைகளில் நிரம்பியிருக்கிறது.

கனமழையை தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு, மாகாணம் முழுக்க நெடுஞ்சாலையை பாதிப்படையச் செய்திருப்பதாக போக்குவரத்து அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும் புயல் ஏற்பட்டதால், பசுபிக் கடற்கரைக்கு ஆல்பர்ட்டாவிலிருந்து கச்சா எண்ணெய்யை கொண்டு செல்லக்கூடிய டிரான்ஸ் மவுண்டன் பைப்லைனை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் Agassiz என்ற நகரத்திற்கு அருகில் மண்சரிவுகளுக்கு நடுவில் அதிகமான வாகனங்கள் மற்றும் டிரக்குகளில் பல மக்கள் மாட்டிக் கொண்டனர். பலமாக காற்று வீசுவதால், அவர்களை மீட்கக்கூடிய பணி சிரமமாக உள்ளது. எனவே, விமானத்தின் மூலமாக மக்களை வெளியேற்றலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |