Categories
உலக செய்திகள்

“வெள்ளம் வடிந்த பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள்!”.. சேறு, சகதிகளை நீக்கிய மக்கள்..!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.

கனடாவில், இதுவரை இல்லாத அளவிற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால், வான்கூவர் தீவு பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டதில், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை கொடுத்து வருகிறார்கள்.

எனினும், தற்போது சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனவே, அப்பகுதிகளில் குவிந்து கிடக்கும், சகதிகள் மற்றும் குப்பைகளை நீக்கும் பணியை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.  மேலும், தாழ்வாக இருக்கும் பகுதிகளில், மணல் மூட்டைகளை அடுக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.

Categories

Tech |