கொலம்பியாவில் பலத்த மழை பெய்ததில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.
கொலம்பிய நாட்டில் ஆண்டியோக்வியா என்ற மாகாணத்தில் பலத்த மழை பெய்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் அங்கிருந்த சுரங்க முகாம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சூழப்பட்டது.
தற்போது வரை, பலத்த மழையில் 13 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர், மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் ஆண்டியோக்வியா மாகாணத்தில் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.