Categories
தேசிய செய்திகள்

சட்டென்று மாறிய வானிலை… டெல்லியை குளுமையாக்கிய மழை – மக்கள் மகிழ்ச்சி!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.

டெல்லியில் நேற்று முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
டெ ல்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 13.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து இன்று வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரில் ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் பல்வேறு இடங்களில் லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. எய்ம்ஸ் மருத்துவமனை பகுதியில் சாலைகளில் தண்ணீர் சூழந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |