Categories
மாநில செய்திகள் வானிலை

டெல்டா மாவட்டதில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் …!!

டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும் .

Image result for வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் .அடுத்த இரு தினங்களில் பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Image result for மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக்கடல் பகுதியில் ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிக்கு , மத்திய கிழக்கு அரபு கடல் பகுதிக்கும் அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று அறிவித்தப் படுகின்றார்கள் என்று தெரிவித்தார்.மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை சற்று குறைந்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |