நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் திருதுறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் வடியாமல் வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.