நீலகிரி மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறதுதொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன.
இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.பல ஆண்டுளாக குடியிருந்து வந்த வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கபட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் வீடுகளை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.