பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும் நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது.
பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை ஆறு நபர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும், 19 நபர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் நிலை என்ன? என்று தெரியவில்லை.