கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டோராவிஜா பகுதியை சேர்ந்த பல வாகன ஓட்டிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கைகளை ஸ்பெயின் நாட்டு அரசு எடுத்து வருகின்றது.