சுவிட்சர்லாந்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டி தீர்த்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் 1918-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உக்கிரமான மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையானது இரண்டே நாட்களில் கொட்டித்தீர்த்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனால் மான்டே ஜெனரோசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் Breggia நதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக Balerna பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் Mendrisiotto பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளம், நிலச்சரிவு, மரங்கள் வேருடன் சாய்தல், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஆகியவற்றின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பெரு வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.