Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்  நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல  சிவகங்கை சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் தூத்துக்குடி, கோவில்பட்டி விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.

Image result for Heavy Rain in Tamil Nadu - Meteorological Center .. !!

இந்நிலையில் தமிழகத்தின் இன்றும்   ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |