தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர்ஆகிய பகுதியில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி விழுப்புரம் போன்ற இடங்களில் ,மாலையில் மழை பெய்ததால் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு சென்றனர்.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், திருச்சி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.