மும்பையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் .
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 9_ஆம் தேதி முதல் 12_ஆம் தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகள் தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ளது. எங்கு பார்த்தலும் வெள்ளநீர் சூழ்ந்து தேங்கி கிடக்கின்றது. தொடர்ந்து பெய்த மழையால் 15 பேர் உயிரிழந்தனர். 23 விலங்குகள் பலியாகின. 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என மாநில அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள லக்னோவில்அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.