வெனிசுலா நாட்டில் தெஜேரியாஸ் பகுதியில் ஜூலியா புயல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரகுவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கனமழை அங்குள்ள மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கனமழையால் உயிர் இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.