Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில்… வருகிறது கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது அந்த வகையில் தற்பொழுது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, மதுரை, தேனி உள்பட 10 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களான, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் மேலும் சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |