பொலிவியாவில் பலத்த மழை பெய்து வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டு, சான்டா க்ரூஸ் என்ற நதியின் வெள்ளத்தில் தூர்வாரக்கூடிய கனரக இயந்திரம் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, அதனை இரண்டு பேர் மீட்பதற்கு முயன்றனர்.
அப்போது, அவர்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். எனவே, வெள்ளத்தில் மாயமான இரண்டு பேரையும் ஹெலிகாப்டர் கொண்டு பாதுகாப்பு படையினர், தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.